Monday, August 30, 2010

தேவை நல்ல தலைவர்

ஒரு அரசியல் தலைவர் சொல்லும் கருத்துக்கள் நல்லதாக இருந்தாலும், இன்றைய சூழலில் அது எடுபடாது. ஏனென்றால் நல்லது சொல்பவர்க்கு credibility மிகவும் அவசியம். இன்றைய அரசியல் தலைவர்களிடம் அது இல்லை. அதனால் அவர்கள் சொல்வதை நடுநிலையான மக்கள் நம்ப தயாராக இல்லை. எல்லா தலைவர்களும் தங்கள் சுயநலத்திற்காக தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் நம் மக்கள். தமிழகத்துக்கு இன்று அவசியம் தேவை காமராஜர் போன்ற தலைவர் தான். தமிழ் நாடு காத்து நிற்கிறது அத்தகைய தலைவருக்கு. கிடைப்பாரா?

Saturday, August 28, 2010

ஒரு நல்ல அரசாங்கத்தின் இலக்கணம்

ஒரு நல்ல அரசாங்கத்தின் இலக்கணம்



ஊழலற்ற, சிறந்த நிர்வாகத்திறன் படைத்த, மக்கள் நலன் மட்டுமே மனதில் நினைத்து கொண்டு வரும் திட்டங்கள், விவசாய மேம்பாட்டு திட்டங்கள், விவசாயிகள் வளமாக வாழ வழி செய்யும் திட்டங்கள், புதிய தொழிற்சாலைகள், நல்ல கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மேம்பாடு, வெளிப்படையான அரசு நிர்வாகம், எல்லாத் தரப்பு மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதி, சிறந்த கல்வி முறை - ஆரம்ப கல்வி முதல் முதுபெரும் கல்வி வரை, படிக்கும் மனமிருக்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இல்லாமல் அவர்கள் விரும்பும் பாடத்தினை படிக்க வழிவகை செய்யும் திட்டங்கள், ஜாதி அடிப்படையில் எந்த ஒரு திட்டமோ சலுகையோ இல்லாமல், அனைவரும் நமது மக்களே என்ற மனப்பாங்குடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து வளத்தோடு வாழ வழி வகை செய்தல், அரசு அலுவலர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள் என்ற எண்ணம் மனதில் பதிய வைத்தல், பணமா அல்லது நேர்மையா என்ற கேள்விக்கு நேர்மை தான் என்று கூறும் மனப்பான்மை, இருப்பவர் இல்லாதவர்களுக்கு உதவி செய்து அவர்களையும் தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்தல், ஊழல் - அப்படி என்றால் என்ன என்று கேட்கும் நிலை கொண்டு வருதல், தவறு செய்தால், அது யாராக இருந்தாலும், தவறிற்கு ஏற்றார்போல தண்டனை தருதல், மக்களுக்கு காவல் துறை மீதும், நீதிமன்றம் மீதும், அரசு அலுவலர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும், விவசாயிகள் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும், மருத்துவர்கள் மீதும், வழக்கறிஞர்கள் மீதும், அவர்கள் தம் தம் நடத்தையால் மிகுந்த மரியாதை உருவாக்குதல், நமது கலாச்சார மற்றும் பாரம்பரியங்களை மதித்து அதனை மேம்படுத்துதல், எளிமையை போற்றுதல், அடக்கத்தை பேணுதல், கல்வி, மருத்துவம், உணவு, இருப்பதற்கு இடம், உடை, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எளிதில் எல்லாருக்கும் கிடைக்கபெற வழி வகை செய்திடல், பட்டினி என்றால் என்ன என்று கேட்கும்படி செய்தல்,



மற்றும் மிகவும் மிகவும் அவசியமான ஒன்று - ஊழலே இல்லாமல் மிகவும் வெளிப்படையான நிர்வாகம் - அரசாங்கமும், அரசு அலுவலகங்களும் இதை நடைமுறை படுத்த வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை. ஊழல் செய்தால் கடுமையான தண்டனை. அது யாராக இருந்தாலும் சரி,